காமன்வெல்த் விளையாட்டு: தமிழக வீரர் ராஜா முத்துப்பாண்டி வெள்ளிப்பதக்கம் வென்றார்.
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டு பளுதூக்குதலில், தமிழக வீரர் ராஜா முத்துப்பாண்டி ஆண்கள் பிரிவில் மொத்தம் 286 கிலோ தூக்கி வெள்ளிப்பதக்கம் வென்றார். அவருக்கு ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என முதல்வர் விஜய் அறிவித்தார்.
பெண்கள் 53 கிலோ பிரிவில் ஞானேஷ்வரி மொத்தம் 199 கிலோ தூக்கி வெள்ளிப்பதக்கமும், 58 கிலோ பிரிவில் பிந்தியாராணி தேவி 199 கிலோ தூக்கி வெண்கலப் பதக்கமும் வென்றனர்.
ஆண்கள் நீளம் தாண்டுதல் தகுதிச் சுற்றில் முரளி ஸ்ரீசங்கர் (8.01 மீ.) மற்றும் லோகேஷ் சத்யநாதன் இருவரும் பைனலுக்கு முன்னேறினர்.
0
Leave a Reply